``விஜய்-க்கு தெளிவில்லை; இந்த அணுகுமுறை அரசியலுக்கு செட் ஆகாது!” - VCK ஆளூர் ஷாநவாஸ்

``விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றுவதில் மட்டும் ஏன் சிக்கல்கள் தொடர்கின்றன?!”

``தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கொடிகளை ஏற்றுவதற்கு முன்அனுமதி என்பது நடைமுறையிலேயே இல்லாத சூழலில் அனுமதியின்றி கொடியேற்றியதாக விசிக கொடி கம்பத்தை காவல்துறையும் வருவாய்துறையினரும் அகற்றுவது தொடர்கதையாகிறது. சாதிய எண்ணத்துடன் செயல்பட்டு அதிகார வர்க்கம் தி.மு.க கூட்டணியை உடைக்கப் பார்க்கிறது. அண்மையில் நாகப்பட்டிணத்தில் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெறவே, ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி அனுமதி மறுக்கப்பட்ட அதே இடத்தில் கொடியேற்றினோம். சொல்லப்போனால் சாதிய எண்ணத்துடன் செயல்பட்டு அதிகார வர்க்கம் தி.மு.க கூட்டணியை உடைக்கப் பார்க்கிறது”

திருமாவளவன்

``வி.சி.க கொடியேற்றுவதை காவல்துறையும் வருவாய்துறையும் தடுப்பதை வேடிக்கை பார்க்கிறதா தி.மு.க அரசு?”

``அப்படியில்லை, நாகையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் தி.மு.க மாவட்ட பிரமுகர்களும் எங்களுடன் பங்கேற்றனர். இதுபோன்ற விவகாரங்கள் ஆட்சியாளர்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதென சொல்ல முடியாது. இருந்தாலும் அரசு இதுபோன்ற விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். சில அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பா.ஜ.க மற்றும் சாதிய சிந்தனையோடுதான் பணியாற்றுகிறார்கள்”

``அண்மையில் நடந்த வி.சி.க-வின் உயர்நிலைக்குழுக் கூட்டம் பற்றிச் சொல்லுங்கள்!”

ஆளூர் ஷாநவாஸ்

``உயர்நிலைக் கூட்டத்தில் நிறைவேற்றிய 12 தீர்மானங்களில் நான்கு தீர்மானங்கள் மதுவிலக்கை வலியுறுத்துபவை. மது மற்றும் போதை ஒழிப்பை வலியுறுத்தி ஆக்டோபர் 2-ம் தேதி மதுவிலக்கு மகளிர் மாநாட்டை நடத்துகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அது சாத்தியமா சாத்தியமில்லையா என்பதை தாண்டி மதுவும் போதை பொருள்களும் மாணவர்களை சீரழிக்கிறது. அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம். மாநிலத்தோடு சேர்த்து தேசியளவிலான மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென மாநாடு வலியுறுத்தும். கூடவே, ‘முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பான அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் சங் பரிவார்களின் அரசியல் நோக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது’ என்றும் தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறோம்”

விஜய்

``கொடி அறிமுகம் செய்துவைத்து மாநாட்டுக்கு தயாராகிறாரே விஜய்..!”

``விஜய் அரசியலை வரவேற்கிறோம், ஆனால் அவரிடம் அரசியல் தெளிவில்லை. ஆடியோ, டீசர், ட்ரெய்லர், படம் என சினிமாவை போல கட்சி அறிவிப்பு, கொடி அறிவிப்பு, மாநாடு, என அரசியலை அணுகிறார். அரசியல் செய்ய எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் அனைத்தையும் தவறவிட்டிருக்கிறார் விஜய். குறைந்தபட்சம், கல்விக்கு விழா எடுக்கும் விஜய்.. கல்விக்கு நிதி பெறுவதில் இவ்வளவு சிக்கல் வந்தும் எதாவது பேசினாரா? கட்சியை ஆரம்பித்துவிட்டு ஓராண்டாண்டுக்கு பிறகுதான் மக்கள் பிரச்னையை பேசுவேன் என்பதும் கொடியை அறிமுகப்படுத்திவிட்டு அடுத்த மாதம் விளக்கமளிப்பேன் என்பதும் அரசியலுக்கு செட் ஆகாது.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/1j3iomD

Post a Comment

0 Comments