தி.மு.க Vs பா.ம.க Vs நா.த.க - விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வாக்குகள் யாருக்கு?!

தேர்தல் பிரசாரத்தின்போது பா.ம.க தலைவர் அன்புமணி, "அ.தி.மு.க-வினருக்கு ஒரு வேண்டுகோள். நம்முடைய பொது எதிரி தி.மு.க. ஒரு வாக்கு கூட தி.மு.க-வுக்கு விழக்கூடாது. அதனால், பா.ம.க-வுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என ஐஸ் வைத்ததோடு, பிரசார கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா போட்டோவையும் காட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றன.

" ஜெயலலிதாவை எல்லோருக்குமான தலைவராகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அதனால்தான் அவரது புகைப்படத்தைப் பயன்படுத்துகிறோம்" என என்னவோ பேசி வருகிறார் அன்புமணி.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அரங்கேறிய கள்ளச்சாராய மரணத்தின்போது, "தமிழ்நாட்டை ஆண்ட இருவரும், கள்ளச்சாரயம் குடித்து செத்தால், 10 கோடி ரூபாய் தருகிறேன்" என்று திமுக, அதிமுக தலைவர்களுக்கு எதிராக சீறிய சீமான், கள்ளக்குறிச்சி சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிரித்தார் சீமான்.

விக்கிரவாண்டி பிரசாரத்தில் சீமான் பேசும்போது, "அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க-வில் இருக்கும் அன்பு உறவுகளே, நம்முடைய பொது எதிரி தி.மு.க-தான். கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன்." என்றிருந்தார்.

சீமான்

இப்படி ஓட்டுக்காக வெளிப்படையாக அதிமுகவிடம் ஆதரவு கோரி நிற்கிறது பா.ம.க-வும் நா.த.க-வும்.

ஆனால், மறுபக்கம் தேர்தல் போட்டியிடாத பா.ஜ.க-வோ அதிமுகவை இஷ்டத்துக்கு விமர்சனம் செய்து வருகிறது. இது பாமகவுக்கு கிடைக்கும் ஓட்டையும் கெடுத்துவிடும் என்கிறார்கள் சீனியர் பாட்டாளிகள்.

இதுதொடர்பாக அ.தி.மு.க சீனியர் அமைப்பு செயலாளர்களிடம் பேசினோம். ``விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டதும், எங்கள் வாக்கு வங்கியை குறிவைத்து எல்லா கட்சிகளும் தீவிரமாக செயல்படுகிறது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகளும் (48.41%) அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 84,157 (43.47) வாக்குகளும் பெற்றனர். 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க வெற்றிப் பெற்றது. நா.த.க-வோ வெறும் 8,216 வாக்குகள்தான் பெற்றது.

எடப்பாடி பழனிசாமி

அதேபோலதான், நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதிக்குள் வரும் விக்கிரவாண்டியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட வி.சி.க 72,188 வாக்குகளும், அ.தி.மு.க 65,365 வாக்குகளும், பா.ம.க 32,198 வாக்குகளும், நா.த.க 8,352 வாக்குகளும் பெற்றி இருந்தது.

அதன்படி, இந்த இடைத்தேர்தலில் பா.ம.க, நா.த.க-வுக்கு டெப்பாசிட்டை தக்கவைக்கவே அ.தி.மு.க-வின் வாக்கு அவசியமாக இருக்கிறது. இதனால்தான், அதிமுகவிடம் நேரடியாகவே ஆதரவு கரம் நீட்டுகிறார்கள். மறுபக்கம் பெரிய வெற்றியை பெற தி.மு.க, தீவிரமாக அ.தி.மு.க வாக்குகளை குறித்து வேலை பார்க்கிறார்கள்.

தற்போதைய நிலைமையில் பா.ம.க கணிசமான ஓட்டு வாங்கினால், அவர்களை கையிலேயே பிடிக்க முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க-வை வைத்து பெரும் திட்டமொன்றை எடப்பாடி கையில் வைத்து இருக்கிறார். அதேநேரத்தில் அவர்களை பகைத்துக் கொள்ளவும் கூடாது என்றுதான், எம்.ஜி.ஆர்., அம்மா படங்களை பயன்படுத்தும் பா.ம.க-வுக்கு அரசியல் பதில் கொடுக்காமல், 'எங்கள் தலைவர்களின் படங்களை பயன்படுத்துவது பெருமையாக இருக்கிறது' நழுவி கொண்டார். மறுபக்கம் இடைத்தேர்தலில் நா.த.க-வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துவிட்டால், அதைவைத்து அவர்கள் விளம்பரம் தேடுவார்கள். நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று ஆதரவு கேட்டு வாங்கி, நாளைக்கே அதிமுகவுக்கு எதிராக பேசுவார். எனவே, அவருடன் நெருக்கமானவது அரசியல் தற்கொலைக்கு சமம். எனவேதான், இடைத்தேர்தலுக்கு நேரடியாக ஆதரவு கேட்டும் பதில் தர மறுத்துவிட்டார் எடப்பாடி.

அன்புமணி, எடப்பாடி பழனிசாமி

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க தலைமை எந்த முடிவையும் எடுக்கவில்லை. நாம் போட்டியிடவில்லை... அதனால் யார் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அது நமக்கு தேவையில்லை... என்ற எண்ணத்தில்தான் இருக்கிறது. அதேநேரத்தில், அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை ஒரு கட்சிக்கு மடை மாற்றிவிடக்கூடாது என்று தலைமை மிக உறுதியாக இருப்பதால்தான், ஆதரவு விஷயத்தில் மிக கவனமாக இருக்கிறது. மறுபக்கம், அதிமுக தொண்டர்கள் பா.ம.க திரும்பும் சூழ்நிலை இருந்தது. ஆனால், ' அதிமுக குறித்து விமர்சனம் செய்து அண்ணாமலையே... அதை முறியடித்துவிட்டார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே... " என்றார் சூசகமாக.

வாக்கு பதிவு தேதி நெருங்க நெருங்க... அதிமுக ஆதரவாளர்களுக்கு பாமகவும் நா.த.க-வும் வைக்கும் ஐஸ் பல மடங்காகவும் வாய்ப்பு இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/O24ZCHE

Post a Comment

0 Comments