`பாஜக எனக்கு இன்னொரு வாய்ப்பு தராது..!' - பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ் பூஷன்

சரியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் யாரும் அவ்வளவாகக் கவனிக்கப்படாத அளவில் அந்த போராட்டம் தொடங்கியது. ஆசிய, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இந்திய மல்யுத்த வீராங்கனைகள், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வில்அரசியல் அதிகாரம் கொண்ட பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக தங்களுக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கினர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் - மல்யுத்த வீராங்கனைகள்

2012 முதல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பிரிஜ் பூஷன் இருந்தபோது தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கண்ணீர் மல்க மல்யுத்த வீராங்கனைகள் கூறியபோதும், காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவும் முன்வரவில்லை, அப்போது பதவியிலிருந்த மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் உட்பட `நாரி சக்தி' என பேசும் எந்தவொரு பா.ஜ.க அமைச்சரும் வாய்கூட திறக்கவுமில்லை. பிரிஜ் பூஷனும், தான் அவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை என வெற்று வார்த்தைகளாகக் கூறிவந்தார். இதற்கிடையில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் பற்றி பத்திரிகையாளர் கேள்வியெழுப்பியபோது பா.ஜ.க அமைச்சர் ஒருவர் ஓடிய காட்சிகளும் அப்போது வைரலாகியது.

பின்னர், ஒருவழியாக உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இதில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. மறுபக்கம், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில், பெண் ஒருவர் போட்டியிட்டபோதும் பிரிஜ் பூஷனின் நெருங்கிய நபரே வெற்றிபெற்றார். அதன்பின்னர், அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பிரிஜ் பூஷன் - மகன் கரண் பூஷன்

இவ்வாறாக ஒருபக்கம் சென்றுகொண்டிருக்க, மக்களவைத் தேர்தலும் நெருங்கியது. இந்த சூழலில் பிரிஜ் பூஷனுக்கு சீட் கொடுத்தால் தேர்தலில் பின்னடைவு என்பதாலும், அதேசமயம் ஆறுமுறை எம்.பி என்ற அவரின் செல்வாக்கை இழக்கக்கூடாது என்பதற்காகவும், அவரின் மகனுக்கு பா.ஜ.க சீட் வழங்கியது. இருப்பினும் உத்தரப்பிரதேச மக்கள் பிரிஜ் பூஷனின் மகனுக்குத் தோல்வியைப் பரிசளித்தனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்

இன்னொருபக்கம், பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கில் விசாரணையும் நடந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், பா.ஜ.க தனக்கு இன்னொரு வாய்ப்பு தராது என்று பிரிஜ் பூஷன் தெரிவித்திருக்கிறார். பரஸ்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த பிரிஜ் பூஷன், ``எனக்குத் தெரியும் பாஜக எனக்கு இன்னொரு வாய்ப்பு தராது. அதேசமயம், நான் எந்தத் தவறையும் செய்யாதபோது, ​​அதை எவ்வாறு ஒப்புக்கொள்வேன்?" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/9cboK7h

Post a Comment

0 Comments