திருச்சி மாவட்டம் மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்தவர் கலையரசன். கடந்த ஆண்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை சுத்தம் செய்யும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ கழிவுகளை சேகரித்து தீ வைக்கும்போது கலையரசன் மீது தீ்ப்பிடித்ததில் பலத்த காயமடைந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கலையரசன் இறப்புக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர் மகன் மரண வாக்குமூலத்தில், குப்பைகளை தீ வைத்து எரிக்க அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மரவனூர் ஆரம்ப சுகாதார நிலைய கொசு மருந்து அடிக்கும் பணியாளரான அவரை, மருத்துவக்கழிவுகளை சுத்தம் செய்யும் பணிக்கு அனுப்பியது ஏன் என்ற கேள்விக்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை. மருத்துவக் கழிவுகளை அழிக்க அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளபோது, காலாவதியான மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் அழிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கழிவுகளில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களும் இருந்துள்ளது. இதனால் மனுதாரரின் மகனின் உடலில் தீ பிடித்துள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கியது. தெரிந்தே சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, அப்பாவி மனுதாரரின் மகன் இறப்புக்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, மனுதாரருக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/kANB5KX
0 Comments