சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக, சோஃபியா ஃபிர்தௌஸ் என்ற இஸ்லாமியப் பெண் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
முப்பத்திரண்டு வயதாகும் சோபிஃயா ஃபிர்தௌஸ், காங்கிரஸ் மூத்த தலைவரான முகமது மொகிமின் மகள் ஆவார்.
Sofia Firdous
இவர் கலிங்கா தொழிற்கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். 2022-ல் பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (IIMB) நிர்வாக மேலாண்மைக்கான படிப்பையும் முடித்துள்ளார். இவர் கடந்த 2023-ம் ஆண்டில், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டிற்கான சங்கங்களினுடைய கூட்டமைப்பின் (CREDAI), புவனேஸ்வர் பகுதிக்கான தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதோடு CREDAI மகளிர் பிரிவின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்தியப் பசுமைக் கட்டடக் குழுவின் (IGBC) புவனேஸ்வருக்கான இணைத் தலைவராகவும், சர்வதேச பெண் தொழிலதிபர்களுக்கான அமைப்பிற்கான (INWEC) முக்கிய பிரதிநிதியாகவும் உள்ளார். தனது தந்தையின் மெட்ரோ கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் பிரபல தொழிலதிபர் ஷேக் மெராஜ் உல் ஹக் ஆவார்.
Sofia Firdous
இவரது தந்தை பாராபட்டி சுட்டக் தொகுதியில் கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது தந்தை சில ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிலையில், அவருக்குப் பதிலாக சோபிஃயா பாராபட்டி சுட்டக் தொகுதியில் களமிறக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த பூர்ண சந்திரா மஹாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார். இதன் மூலம் ஒடிசாவின் முதல் இஸ்லாமியப் பெண் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார் சோபிஃயா. அதோடு ஒடிசாவின் முதல் பெண் முதல்வரான நந்தினி சத்பதி, 1972-ல் இதே தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக தேர்வானது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
from India News https://ift.tt/mxjTcuQ
0 Comments