இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மூன்றாவது முறையாக, பாஜக-வுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் சில பிரசாரங்கள் சமூகவலைதளத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதில் ஒன்றுதான் எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கத்தில் தங்கள் பெயருக்குப் பின் அடைப்புக்குள் (Modi Ka Pariwar) அதாவது `நாங்கள் மோடியின் குடும்பம்’ என அடைமொழியை சேர்த்துக்கொண்டது.
இந்த மாற்றத்துக்கு பீகாரின் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி கட்சித் தலைவருமான லாலுபிரசாத் யாதவ்தான் காரணம். லாலுபிரசாத் யாதவ் தேர்தல் பிரசாரத்துக்காக பாட்னாவில் நடந்த இந்திய கூட்டணிக் கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, `` மோடிக்கு சொந்தமாக குடும்பமும் இல்லை. ராமர் கோவிலை பற்றி பெருமையாக கூறி வருகிறார். அவர் உண்மையான இந்துவும் இல்லை” என்றார்.
இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாற்றும் விதமாக, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் தங்கள் எக்ஸ் தளப் பெயருக்குப் பின்னால் 'மோடி கா பரிவார்' என்பதை சேர்த்தனர். அதை பா.ஜ.க தொண்டர்களும் அப்படியே பின்தொடர்ந்தனர். இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைத்திருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ``தேர்தல் பிரசாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' என்பதைச் சேர்த்துக்கொண்டனர். அதிலிருந்து நான் நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இதுவும் ஒரு வகையான சாதனைதான்.
மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதன் மூலம் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் உங்கள் சமூக ஊடகப் பக்கங்களின் பெயரிலிருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் பெயர் வேண்டுமானால் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே பரிவார் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/g7GK1rm
0 Comments