வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
தென்மேற்கு வங்கக் கடலில் நாளை(மே 22-ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தமிழக கடலோர பகுதியை நெருங்கிய செல்லும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையம், ``நாளை தென்மேற்கு வங்க கடலில் உருவாகும், காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிபெறும். இதன் காரணமாக இன்று முதல் வரும் 24ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from India News https://ift.tt/HpU8zR3
0 Comments