நாடு முழுவதும் 93 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 4 தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், டையூ-டாமனில் 2 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகள், குஜராத்தில் 25 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான், தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சியின் சார்பில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின்மனைவி சுனித்ரா பவார், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் இன்று தேர்தலை எதிர்கொள்பவர்களில் முக்கியமானவர்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/6rzZaB0
0 Comments