மூன்றாவது குழந்தையை பெற்ற பாஜக கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு - காரணம் என்ன?

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டதின் இரண்டு பா.ஜ.க கவுன்சிலர்கள் மூன்றாவது குழந்தைக்கு பெற்றோர் ஆனதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்ககள். இந்த தகுதி நீக்கம் குறித்து பேசிய அமரேலி மாவட்ட ஆட்சியர் அஜய் தாகிய, ``அமரேலியின் தாம்நகர் நகர்பலிகா கவுன்சிலர்களான கிமா காசோடியா, மேக்னா போகா இருவரும் கவுன்சிலர் தேர்தலுக்கான வேட்பு மனுவில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது அவர்கள் மூன்றாவது குழந்தைக்கு பெற்றோராகியிருப்பதாக தகவல் கிடைத்தது.

அஜய் தாகிய

குஜராத் மாநிலத்தின் முனிசிபல் சட்டப் பிரிவு 11(1)(h) படி மூன்று குழந்தை இருப்பவர் கவுன்சிலராக பதவி வகிக்க முடியாது. கடந்த ஆண்டு இருவருக்கும் குழந்தை பிறந்ததால், கிமா காசோடியா, 2023 மே 10-ம் தேதி முதலும், மேக்னா போகா 2023 மார்ச் 14 தேதியிலிருந்தும் கவுன்சிலர் பதவியை இழக்கிறார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக மூன்றாவது குழந்தைக்கு தந்தையான கிமா காசோடியா,``தேர்தலில் போட்டியிடும் போதுதான் மூன்று குழந்தை இருக்கக் கூடாது. பதவிக்கு வந்ததும் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என நினைத்தேன். இது தொடர்பாக விரிவான ஆலோசனை தேவைபடுகிறது. ஆட்சியாரின் ஆணை கிடைத்திருக்கிறது. எனவே, ஆலோசனைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

பாஜக

மற்றொரு கவுன்சிலரான மேக்னா போகாவின் கணவர் அரவிந்த், ``ஆட்சியரின் ஆணையை ஏற்கிறோம். எங்களின் தகுதி நீக்கத்தால் பா.ஜ.க-வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. பணியில் இருக்கும்போதுதான் எங்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. ஆனால் அது எந்த வகையிலும் கவுன்சிலர் பதவியை பாதிக்காத வகையில்தான் நடந்துகொண்டோம். இந்த சட்டத்தால் என் மனைவி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதை எதிர்த்து வழக்காட விரும்பவில்லை. இனி குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/fJ1XjrC

Post a Comment

0 Comments