புதுச்சேரி: லீவு கேட்ட காவலரிடம் உயரதிகாரியின் `ஷாக்’ டிமாண்ட்; காவலரின் மனைவி அளித்த பகீர் புகார்!

புதுச்சேரி ஐ.ஆர்.பி.என் பட்டாலியனில் உதவி சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் சில நாள்களுக்கு முன்பு தன்னுடைய உயரதிகாரி ஒருவருக்கு போன் செய்து, தனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்போது அந்த உயரதிகாரி, தான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும், அதனால் பெண் யாரையாவது ரெடி செய்து அனுப்பும்படி கேட்டதாகவும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையில் சிக்கியிருக்கிறது புதுச்சேரி காவல்துறை. மிக சரியாக 1.27 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோவில் உரையாடல் அப்படியே கீழே…

புதுச்சேரி

சந்திரன்: `சார் குட் ஈவ்னிங் சார்’

உயரதிகாரி: `சொல்லுப்பா’

சந்திரன்: ‘எனக்கு முடியவில்லை சார். அதுதான் எம்.எல் (ML - Medical Leave) வேணும் சார்’

உயரதிகாரி: `சரிடா… உனக்கு எம்.எல் வேணுமா? நீ எம்.எல்லும் போட வேணாம் எதுவும் போட வேணாம். நீ எதுவா இருந்தாலும் பார்த்துக்கடா. சார் இருக்கேன் இல்ல…?’

சந்திரன்: `சரிங்க சார். எதாவது வேணும்னா சொல்லுங்க சார்’

உயரதிகாரி : `நான் சொல்றத கேளு. நான் மனக் கஷ்டத்தில் இருக்கேன். உனக்கு ஒரு மனக் கஷ்டம் வந்தால், எனக்கு ஒரு மனக் கஷ்டம் இருக்கும் வரும் புரியுதா? எதாவது `பீஸ்’ இருந்தால் ரெடி பண்ணி கொடு. அமௌண்ட் எல்லாம்…

சந்திரன்: `ஃபிஷ்ஷா சார் ? ஃபிஷ்(மீன்) வேணுமா சார்’

உயரதிகாரி: `அப்போ நீ இரவு 10 மணிக்கு டூட்டிக்கு போகலையா. நீ வாட்ஸ்-அப் காலில் வா’ என்பதுடன்... அந்த ஆடியோ முடிவடைகிறது.

புதுச்சேரி போலீஸ்

சமூக ஊடகங்களில் இந்த ஆடியோ பரவியதையடுத்து சம்பந்தப்பட்ட உயரதிகாரி, சந்திரனிடம் சமாதானம் பேசியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சந்திரனின் மனைவி ஆர்த்தீஸ்வரி என்பவர் ஐ.ஆர்.பி.என் கமாண்டண்டரிடம் அளித்திருக்கும் புகாரில், `அந்த உயரதிகாரி என் கணவரிடம் பேசும்போது நானும் பக்கத்தில்தான் இருந்தேன். வாட்ஸ்அப் காலில் வந்தவர் அப்போது, `உனக்கு நான் எல்லாம் செய்து தருகிறேன். என் மனைவி வீட்டில் இல்லை.  அதனால் என் வீட்டிற்கு எதாவது ஒரு பெண்ணை அனுப்பிவை' என்று சொன்னார். அதையடுத்து என் கணவர் புகார் கொடுக்க தயாரானபோது, புகார் கொடுக்கக் கூடாது என்று நான் நடத்தும் மளிகைக் கடைக்கு வந்து மிரட்டும் தொனியில் பேசினார்கள். அதனால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/RIHkiCb

Post a Comment

0 Comments