`காங்கிரஸோடு சேர்ந்து அழிந்து போகாதீர்கள்!' - உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கு மோடி ஆலோசனை

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் ஐந்து கட்டமாக நடக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நந்துர்பரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''50 ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்த பெரிய தலைவர் பாராமதி தேர்தலுக்குப் பிறகு கவலைப்படுகிறார். அத்தலைவர் அளித்துள்ள பேட்டியில், சிறிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியோடு இணைய வேண்டும் என்று சொல்கிறார்'' என்று சரத் பவாரை மறைமுகமாகச் சாடினார்.

பிரதமர் மேலும் கூறுகையில், ``போலி சிவசேனாவும், போலி தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவே இதற்கு அர்த்தம். ஆனால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அழிவதை விட இரு கட்சிகளும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரிடம் வரவேண்டும். காங்கிரஸ் இந்து நம்பிக்கையை அழிக்க சதி செய்கிறது.

பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா

ராமர் கோயில், ராம நவமி போன்றவை இந்தியாவிற்கு எதிரானது என்று காங்கிரஸ் குருக்கள் கூறுகின்றனர். கிருஷ்ணரின் நிறத்தைக் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று காங்கிரஸ் கூறுகிறது. எனவே திரௌபதி ஜனாதிபதியாவதை அவர்கள் விரும்பவில்லை. இது பழங்குடியினரை அவமதிக்கும் செயல் கிடையாதா?

ராமர் கோயில் கட்டுவது மற்றும் ராம நவமி விழாக்களுக்கு எதிரான காங்கிரஸ் கொள்கை மிகவும் ஆபத்தானது. அவர்கள் கோயிலுக்கு செல்வதைக்கூட சட்டவிரோதம் என்று சொல்லக்கூடும். ராமர் பூமி, ராமர் கோயில் இந்தியாவிற்கு எதிரானது என்ற மனநிலையில் காங்கிரஸ் இருக்கிறது. அவர்கள் அரசு இப்ஃதாருக்கு ஏற்பாடு செய்கின்றனர். தீவிரவாதிகளின் கல்லறையை அழகுபடுத்துகின்றனர். டூப்ளிகேட் சேனா என்னை உயிரோடு புதைப்பது குறித்து பேசுகிறது. இந்திய மக்கள்தான் எனது பாதுகாப்பு. எனவே அவர்களால் என்னை உயிரோடு அல்லது பிணமாக புதைக்க முடியாது.

தேர்தல் பிரசாரத்திற்கு அவர்கள் குண்டு வெடிப்பு குற்றவாளியை அழைத்து வருகின்றனர். இவர்கள்(உத்தவ்) பொது மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்டனர். அவர்களின் அரசியல் இடம் காணாமல் போய்விட்டது.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது நமது அரசியலமைப்பு எதிரானது. நான் உயிரோடு இருக்கும் வரை ஆதிவாசிகள், பட்டியலின மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து ஒரு இஞ்ச் கூட எடுக்க விடமாட்டேன்.

சரத் பவார் - உத்தவ் தாக்கரே

உங்களது ஆசிர்வாதம் நான் மூன்றாவது முறையாக பிரதமராவதை உறுதி செய்வதாக இருக்கிறது. நான் காங்கிரஸ் கட்சியை போன்றவன் கிடையாது. ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை கடந்த பிறகும் ஆதிவாசிகள், ஏழைகள் வீடு, மின்சாரம், தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர்.

எனது அரசு அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த கடுமையாக உழைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதிவாசிகளை பற்றி கவலையில்லை'' என்றார்.

பிரதமர் மோடியின் கருத்து பற்றி சரத் பவார் கூறுகையில், ``ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் நான் கூட்டணி வைப்பதில்லை. பிரதமரின் சமீபத்திய பேச்சு சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/JgwzOnP

Post a Comment

0 Comments