"திமுக-வின் நினைப்பு எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் என்னாகுமோ, ஏதாகுமோ, எவ்வளவு தோல்வியை சந்திக்க போகிறோமோ என்ற கவலையிலேயே முடங்கி கிடப்பதாகத்தான் தெரிகிறது.." என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம், அத்திபட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் அன்னதான விழாவை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
``திமுக ஆட்சியில் வரும்முன் காப்பதை காற்றில் பறக்க விட்டுவிட்டு, வந்த பின் பார்ப்போம் என்று புதிய தத்துவத்தை கையாளுகிறார்கள்.
அதனால், மக்கள் துன்பத்திலும், துயரக்கடலிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்கவேண்டும் என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் `குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது' என அறிவித்திருக்க வேண்டும். ஆனால், சிறுவன் அடித்து செல்லப்பட்டு உயிர் பறிபோன பின்பு தடை செய்கிறோம் என்கின்றனர்.
இதே நிலைதான் தமிழ்நாடு முழுவதும்... வந்ததற்கு பிறகு, உயிர் போன பிறகு நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்த நிவாரண நடவடிக்கைகளையும் சரியாக எடுப்பதில்லை.
பேரிடரை யாராலும் தடுக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது ஆனால் உயிர் சேதம், பொருட் சேதம், கால்நடைகள் சேதம் ஏற்பாடாமல் எதிர்கொள்ள முடியும். ஆனால், இவர்களுக்கு அதைப்பற்றி சிந்திக்க நேரமில்லை.
திமுக-வின் நினைப்பு எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் என்னாகுமோ, ஏதாகுமோ, எவ்வளவு தோல்வியை சந்திக்க போகிறோமோ என்ற கவலையிலேயே முடங்கி கிடப்பதாகத்தான் தெரிகிறது.,
போதைப்பொருள் நடமாட்டத்தில்கூட ஏற்கெனவே ஆய்வு கூட்டங்கள் நடத்தினார். தடுக்க முடியவில்லை, இப்போது முதல்வரே ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார், இதை தடுக்க வேண்டுமென்றால் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே முடியும். அதற்கு முதலமைச்சர் முன்வருவாரா?
போதைப்பொருள் நடமாட்டத்தால் பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கிற நிலை உள்ளது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
from India News https://ift.tt/60zBqhD
0 Comments