`கமிஷனுக்காக ரூ.55 கோடி நன்கொடை!’ - IT ரெய்டை சந்தித்த கட்சி, மும்பையில் 3 தொகுதியில் போட்டி!

நடைபெறும் மக்கவைத் தேர்தலில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் கணிசமாக போட்டியின்றனர். மும்பையில் சர்தார் வல்லபாய் பட்டேல் என்ற கட்சியும் போட்டியிடுகிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியாகும். இக்கட்சி மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் பெரிய அளவில் சொத்து கிடையாது. மூன்று பேரும் தங்களுக்கு எந்தவித வருமானமும் இல்லை என்று தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதோடு அவர்களுக்கு சொந்த வாகனமும் கிடையாது.

இரண்டு பேருக்கு சொந்த வீடே கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை, வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அதில் சர்தார் வல்லபாய் பட்டேல் கட்சியும் அடங்கும். இக்கட்சி எந்த வித செயல்பாட்டிலும் ஈடுபடாமல் 55 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை பெற்று இருந்தது. இது தொடர்பாக அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. ஆனால் அக்கட்சி எந்த வித செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை.

அக்கட்சி வங்கிகள் மூலம் நன்கொடை பெற்றுவிட்டு அதில் தங்களது கமிஷனை மட்டும் எடுத்துக்கொண்டு எஞ்சிய பணத்தை நன்கொடை கொடுத்தவர்களிடமே திரும்ப கொடுத்துள்ளனர். இது தொடர்பாக 2022 ம் ஆண்டு வருமான வரித்துறை அக்கட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்தியது. இக்கட்சி சார்பாக வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் கமலேஷிடம் இது குறித்து பேசிய போது, ``எங்களது கட்சிக்கு குஜராத்தில் 4 கவுன்சிலர்கள் இருக்கின்றனர். கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க இத்தேர்தலில் போட்டியிடுகிறோம்” என்றார். கமலேஷ் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரது மனைவிக்கோ அல்லது அவர் வசிக்கும் கட்டடத்தில் இருக்கும் யாருக்கும் கூட தெரிந்திருக்கவில்லை என்கிறார்கள் அப்பகுதியினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/v0wVK7O

Post a Comment

0 Comments