பாலத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து: பெண் உட்பட 5 பேர் பலி
பூரியிலிருந்து 40 பயணிகளுடன் கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, நேற்று இரவு 9 மணியளவில், ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில், பாலத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மற்றும் பலர் காயமடைந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணித் தலைவருமான இந்திரகுமாரி காலமானார். கடந்த 1991 முதல் 1996 வரையிலான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக அவர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ``திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி அவர்கள் மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி அவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு கழகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரி அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
from India News https://ift.tt/clbE8fW
0 Comments