கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா - கனடா உறவில் விரிசல் நீடிக்கிறது. இந்த நிலையில், கனட பிரதமர் கலந்துகொள்ளும் வருடாந்திர பொதுக்கூட்டம் டொராண்டோவில் நடைபெற்றது. அப்போது கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்ற மேடையில் ஏறியபோது காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது. இந்த சம்பவம் இந்தியா - கனடா உறவில் விரிசலை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், இந்திய அரசு, கனடாவின் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது. அதில்,``கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கலந்துகொண்ட நிகழ்வில், காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது, இந்திய அரசின் ஆழ்ந்த கவலையும், கடும் எதிர்ப்பும் தடையின்றி தொடர அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடாவில் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் வெளியை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான வெளிப்பாடுகள், இந்தியா-கனடா உறவுகளை பாதிப்பது மட்டுமல்லாமல், கனடாவில் அதன் சொந்த குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வன்முறை மற்றும் குற்றச் சூழலை ஊக்குவிக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் பிரிவினைவாத முழக்கங்களை எழுப்பியதற்காக கனட தூதரக அதிகாரியை வரவழைத்து பேசியதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/aJ4Rufi
0 Comments