சிட்டிங் எம்.பி-க்களுக்கு கல்தா; மும்பை தாக்குதல் வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞருக்கு பாஜக-வில் சீட்!

மும்பையில் மக்களவை தேர்தலுக்கு பா.ஜ.க இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. அதுவும் பா.ஜ.க-வின் கோட்டையாக கருதப்படும் வடக்கு மும்பையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் வடமத்திய மும்பை தொகுதிக்கு பா.ஜ.க வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. இத்தொகுதியில் ஏற்கனவே எம்.பி.யாக இருக்கும் பூனம் மகாஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க பா.ஜ.க தயங்கி வந்தது. அதேசமயம் வலுவான வேட்பாளர் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் மும்பை தாக்குதல் வழக்கில் மாநில அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகம் என்பவரை பா.ஜ.க வடமத்திய மும்பை தொகுதி வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் போட்டியிடுகிறார். வடமத்திய மும்பை தொகுதியில் பட்டியலின மக்கள் மற்றும் முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கின்றனர்.

பூனம் மகாஜன்

சாந்தா குரூஸ் மற்றும் விலேபார்லே பகுதியில் கணிசமாக குஜராத்தியர்கள் வசிக்கின்றனர். பாலிவுட் பிரபலங்களும் இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். அதோடு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வீடும் இத்தொகுதிக்குள் தான் இருக்கிறது.

ஏற்கனவே பா.ஜ.க சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் வேறு மொழியை சேர்ந்தவர்கள் என்பதால், இப்போது மராத்தி சமூகத்தை சேர்ந்த உஜ்வல் நிகத்தை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் படகு மூலம் வந்து தாக்குதல் நடத்தியபோது பிடிபட்ட அஜ்மல் கசாப் மீதான வழக்கு விசாரணையில் அரசு சார்பாக உஜ்வல் நிகம் தான் ஆஜராகி வாதாடினார். இது தவிர மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு, குல்ஷன் குமார் கொலை வழக்கு, பிரமோத் மகாஜன் கொலை வழக்குகளிலும் அரசு சார்பாக ஆஜரானார். இது தவிர மும்பையில் தீவிரவாதம் உட்பட முக்கிய வழக்குகளில் அரசு சார்பாக உஜ்வல் நிகம் தான் ஆஜராகி வாதாடினார்.

உஜ்வல் நிகம்

வட மத்திய மும்பை தொகுதியில் போட்டியிடும்படி மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலாரிடம் பா.ஜ.க கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் தனக்கு மத்திய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். அதனை தொடர்ந்தே வேறு வேட்பாளரை பா.ஜ.க தேர்வு செய்துள்ளது. பா.ஜ.க இது வரை மும்பைக்கு வேட்பாளர் அறிவித்துள்ள 3 தொகுதியிலும் ஏற்கனவே எம்.பி.யாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அடுத்து தென்மும்பை தொகுதியையும் பா.ஜ.க கேட்டுக்கொண்டிருக்கிறது.



from India News https://ift.tt/jLqPrF8

Post a Comment

0 Comments