ஊட்டி: திடீரென தடைபட்ட ஸ்ட்ராங் ரூம் டி.வி திரை ஒளிபரப்பு; பதறிய அதிகாரிகள்! - என்ன நடந்தது?

2024 மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா ஆகிய சில மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்திருக்கிறது. வரவிருக்கும் ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

சி.சி.டி.வி

பாதுகாப்பு வீரர்கள், சி.சி.டி.வி கேமராக்கள், தேர்தல் பணியாளர்கள், கட்சி முகவர்களின் தீவிர கண்காணிப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை, ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், முகவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளின் டி.வி திரை திடீரென தடைபட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கட்சி முகவர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.‌

மேலும், டி.வி திரைகளில் காட்சிகள் தடைபட்டது குறித்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அருணா உடனடியாக ஸ்ட்ராங் ரூமிற்கு விரைந்து, தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். 20 நிமிடங்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு மீண்டும் சரி செய்துள்ளனர்.

சி.சி.டி.வி காட்சிகள்

இது குறித்து தெரிவித்த தேர்தல் அதிகாரிகள், ``திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சி.சி.டி.வி காட்சிகள் திரையிடப்படும் டி‌.விக்களில் காட்சிகள் தடைபட்டது. ஆனால் , சி.சி.டி.வி கேமராக்கள் பதிவாவதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காட்சிகள் பதிவாகியிருக்கிறது. திரையில் ஏற்பட்ட கோளாறு 20 நிமிடங்களில் சரி செய்யப்பட்டது. தற்போது வழக்கம்போல இயங்கி வருகிறது" என்றனர்.



from India News https://ift.tt/DxceCyZ

Post a Comment

0 Comments