கேரள மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி கடந்த ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். சில மாதங்களுக்கு முன் கேரளா முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலும் பா.ஜ.க-வில் இணைந்தார். அதைத்தொடர்ந்து கேரளா முன்னாள் முதல்வர்களின் பிள்ளைகள் பா.ஜ.க-வில் இணைவார்கள் எனக்கூறி பத்மஜா பரபரப்பை கிளப்பினார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆன்றணி பத்தனம்திட்டா நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடுகிறார். மகன் அனில் ஆண்டனி பா.ஜ.க-வில் இணைந்ததும், வேட்பாளராக களம் இறங்கியதும் தந்தை ஏ.கே.ஆண்டனிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், `மகனுக்கு எதிராக பிரசாரம் செய்ய பத்தனம்திட்டா தொகுதிக்கு செல்வீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, `உடல்நிலை ஒத்துழைத்தால் நான் பிரசாரத்துக்கு செல்வேன்’ என கூறியிருந்தார் ஏ.கே.ஆண்டனி.
இந்த நிலையில் ஏ.கே.ஆன்றணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, `முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் உங்கள் மகன் அனில் ஆன்றணி வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இல்லையா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.கே.ஆண்டனி, "பா.ஜ.க தோற்க வேண்டும். அனில் ஆண்டனி தோற்க வேண்டும். பத்தனம்திட்டாவில் அனில் ஆண்டனி தோற்பது உறுதி. காங்கிரஸ் வேட்பாளர் ஆன்றோ ஆண்டனி வெற்றிபெற வேண்டும். நான் பிரசாரத்துக்கு போகாமல் இருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர் ஆன்றோ ஆண்டனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். ஏனென்றால் நான் காங்கிரஸ், எனது மதம் காங்கிரஸ். காங்கிரஸ் நிர்வாகிகளின் பிள்ளைகள் பா.ஜ.க-வில் இணைவது தவறான முடிவு. குடும்பம் வேறு அரசியல் வேறு" என்றார்.
தந்தை ஏ.கே.ஆன்றணி இந்த பேச்சுக்கு பதிலளித்து பேசிய அனில் ஆண்டனி, "தேச விரோத கொள்கையை உடைய ஆன்றோ ஆண்டனிக்காக பேசுவதும், காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக நிற்பதையும் பார்க்கும்போது அப்பா மீது அனுதாபம் மட்டுமே ஏற்படுகிறது. பத்தனம்திட்டாவில் நான் வெற்றிபெறுவேன். ஆன்றோ ஆண்டனிக்கு படுதோல்விதான் கிடைக்கும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார். ராகுல் காந்தி வழிநடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/5f4jwOA
0 Comments