நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் பேட்டியிடுகிறார். தொகுதியின் பல பகுதிகளிலும் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். கூட்டம் நிறைவடைந்த நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவர் மக்களுக்கு பணம் விநியோகம் செய்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிரசார கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதை உறுதி செய்து, சம்மந்தப்பட்ட நிர்வாகி மீது தற்போது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தெரிவித்த நீலகிரி தொகுதி தேர்தல் அதிகாரிகள், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுப்பெற அ.தி.மு.க ஊட்டி ஒன்றிய செயலாளர் பெள்ளி என்பவர் முயற்சி செய்திருக்கிறார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் " என தெரிவித்துள்ளனர்.
from India News https://ift.tt/yGf6i7N
0 Comments