Tamil News Live Today: விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னையில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடைப்நெற்று வருகிறது. அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு செற்று வருகிறது. அந்நிறுவனத்தின் உரிமையாளரான செல்வராஜ் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடைபெறுகிறது.

ஆதவ் அர்ஜுனா

அதேபோல, சமீபத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையிலுள்ள ஆதவ் அர்ஜுன் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல், சென்னை ஆர்.ஏ.புரம், வேப்பேரி உட்பட நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். இதில், வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலையில் பிரின்ஸ் கார்டன் பகுதியில் மகாவீர் ரானி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.



from India News https://ift.tt/uC2WUot

Post a Comment

0 Comments