`அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு’
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணையை 1.1.2024 முதல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகமாகும்.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் காரணமாக அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்தச் செலவு ஆண்டுக்கு 12,868.72 கோடி ரூபாயாக இருக்கும். இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.300 மானியத்தை தொடர்ந்து அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், 2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்துவதற்கான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம், உத்தர்பூர்வா மாற்றத்திற்கான தொழில்மயமாக்கல் திட்டம், முதலியவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/QtAXpOu
0 Comments