பாஜக மாநிலத் தலைவர் கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் பாஜக-வினர் வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கோவை நாடாளுமன்ற தொகுதியில் மூன்று வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது.
70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்துக்கும், மறுபுறம் தர்மத்துக்குமான போட்டி. தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும். திமுக-வின் எல்லா அமைச்சர்களும் வரட்டும். நாங்கள் தயார். தமிழகத்தின் அரசின் மாற்றம் கோவையில் இருந்து தொடங்க வேண்டும்.
கோவையை இந்தியாவின் மேப்பில் அல்ல, இன்டர்நேஷனல் மேப்பில் பதிய வைக்கப் போகிறோம். தமிழ்நாட்டு அரசியலில் தான் இருப்பேன். டெல்லி அரசியல் எனக்கு பிடிக்காது. போக மாட்டேன். மோடி உத்தரவிட்டதால் போட்டியிடுகிறேன். 2026ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும்போது எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இரண்டு ஆண்டுகளில் என்ன மாற்றம் வந்திருக்கிறது என்பதை காட்ட வேண்டும்.
மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவது 2026-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்காகதான். திமுக தேர்தல் அறிக்கை கொடுப்பதும், அதில் இருப்பதெல்லாம் செய்யாமல் இருப்பதும் வாடிக்கை. 2026-ம் ஆண்டு பெட்ரோல் டீசல் இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள். டாய்லட் பேப்பர் இல்லை என்றால், திமுக தேர்தல் அறிக்கையை பயன் படுத்துங்கள்.
எனக்கு இங்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் சண்டை கிடையாது. பிரசாரத்தின்போது அவர்களது பெயர்களை கூட சொல்ல மாட்டேன். அறிவாலயத்தோடு, கோபாரபுரத்தோடு என் சண்டை. கீழே இருப்பவர்களுடன் கிடையாது. கோவைக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். பணத்தை கொண்டு வந்து நூற்றுக்கணக்கான கோடி கொட்டுவார்கள். நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டோம். மாற்றத்தை நம்பி வந்திருக்கிறோம். பா.ஜ.க ஒரு தேர்தல் விதிமீறலில் கூட ஈடுபடாது. பிற கட்சிகளில் வலை வீசி வேட்பாளர்களை தேடுகின்றனர். மாற்றுகின்றனர். இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை மாற்றுவார்கள். பிரதமரின் ரோட் ஷோவை லட்சக்கணக்கானோர் பார்க்க வந்தனர். அந்தப் பகுதியில் விடுமுறை கொடுத்திருக்கின்றார்கள். அதனால் தங்களுடைய பிரதமரை பார்ப்பதற்கு வந்திருக்கின்றனர். குழந்தைகளை நாங்கள் அழைத்து வரவில்லை.” என்றார்.
from India News https://ift.tt/MxeQ9Nr
0 Comments