தி.மு.க கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும், அந்தக் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார். மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை குறைப்போம் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை மக்களிடம் கொண்டு சென்றாலே 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான தேர்தல் அறிக்கையாக இது உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை ஒன்றே எங்கள் கூட்டணி வெற்றி பெற போதுமானதாக உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு என்னென்ன தேவையோ அதனை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பின் செயல்படுத்துவேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிமைகளும், கடமைகளும் என்னென்ன என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுவேன்.
சராசரி அரசியல்வாதி போல் அனைத்தையும் செயல்படுத்துவேன் என கூற மாட்டேன். எது என்னால் முடியுமோ.. என்னால் சாத்தியப்படுமோ அதை செயல்படுத்துவேன். மற்றதை செயல்படுத்த முயற்சிப்பேன்.
பா.ஜ.க-வுக்கு மக்கள் மேல் நம்பிக்கை இல்லை. வாக்கு இயந்திரம் மேல் தான் நம்பிக்கை வைத்துள்ளார்கள். வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்டவை மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையமும் பா.ஜ.க-வின் கையில் தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என பா.ஜ.க நினைக்கலாம். ஆனால், மக்கள் ஆதரவோடு இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி நாடு முழுவதும் வலுவாக உள்ளது.
ஆளுநர், முதலமைச்சரின் யோசனையின் படி தான் செயல்பட வேண்டும். அவருக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அந்தந்த மாநில அரசுகளுக்கு தொடர்ந்து இடையூறு செய்யப்பட்டு வருகிறது. ம.தி.மு.க-வை பொறுத்தவரை நாங்கள் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம். திருச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் என்னென்ன தேவை உள்ளது என்பதை ஆராய்ந்து அதனை மையப்படுத்தி ம.தி.மு.க சார்பில் ஒரு தேர்தல் அறிக்கை தயாரிப்போம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/whMprPS
0 Comments