மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளத்தில் கண்மாய் மீன்பிடி குத்தகைக்கான பணம், கிராம மக்களால் நன்கொடையாக போடப்பட்டுள்ள பணம் என ரூ.40 லட்சம் அளவுக்கு ஊர் மந்தையில் இருந்த பெட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பெட்டிக்கான சாவிகளை கிராமத்திலுள்ள நான்கு முக்கிய நிர்வாகிகள் தங்கள் வசம் பத்திரமாக வைத்திருந்து கிராமத்தின் வளர்ச்சி மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு தேவைப்படும்போது எடுத்து செலவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கிராம மக்கள் பாரம்பரியமாக பெட்டியில் பாதுகாத்து வரும் இப்பணத்தை, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின்போது கிராம வாக்காளர்களுக்கு வழங்க அரசியல் கட்சியினர் முயல்வதாகவும், எப்போது வேண்டுமானாலும் திருடு போகும் சூழல் உள்ளது எனவும் காவல்துறையின் அவசர எண்ணுக்கு யாரோ மர்ம நபர்கள் பேசியுள்ளார்கள்.
உடனே உசிலம்பட்டி உதவி தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாச்சியருமான ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள், அங்கு வந்து பணப்பெட்டிக்கு சீல் வைத்து எடுத்துச் செல்ல முற்பட்டனர்.
இதனால் பதற்றமடைந்த கிராம மக்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கிராம மக்களுடன் தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் முன்னிலையில் பெட்டிக்கு சீல் வைத்து 24 மணி நேரமும் போலிஸ் பாதுகாப்பு அளித்து கண்காணித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/NlraGZq
0 Comments