பெண் மருத்துவரின் புகார்; ஆஜராகாத கணவர் - `15 நாள்கள்தான்..!’ - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

மதுரையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனக்கு சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த மருத்துவர் ஆசிக் அலியுடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு 200 சவரன் நகைகள், ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்களை வரதட்சணையாக என் பெற்றோர் கொடுத்தனர்.

Look out notice

பின்னர் கணவரின் விருப்பப்படி சென்னையில் வசித்து வந்தோம். ஆனால், என் கணவரின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிந்தது. திருமணம் நடந்து பல நாட்ள்களாக என்னோடு எந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் உடல்நல குறைபாடு உள்ளவர் என்றும், அதனால், ஏற்கனவே அவருக்கு திருமணம் நடந்து விவகாரத்து பெற்றதும் பின்புதான் தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு என்னை அசிங்கமாக பேசினார். அவர் பெற்றோரும், சகோதரிகளும் என்னை பல வகையிலும் இழிவாகப்பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். தங்கள் மகனுக்கு இருக்கும் பிரச்னையை மறைத்தும், ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனதை மறைத்தும் மோசடியாக என்னை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து என் பெற்றோரிடம் தெரிவித்தேன். இந்நிலையில் என் கணவர் யாரிடமும் எந்த தகவலும் சொல்லாமல் இமெயில் மூலம் தலாக் கூறிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார்.

மதுரை உயர் நீதிமன்றம்

இதுகுறித்து மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையாக விசாரனை செய்யவில்லை. பின்னர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை தொடர்ந்து கணவர் ஆசிக் அலி, அவரது பெற்றோர் முகம்மது அலி, ஜுனைதா பேகம், சகோதரிகள் பாத்திமா ஜாஸ்மின், ரிஜ்வானா, அவர் கணவர் சாதிக் பாபு ஆகியோர் 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை 4 மாதங்களில் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டது.

மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள ஆசிக் அலி இதுவரை விசாரனைக்கு ஆஜராகவில்லை. 5 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஒருமுறை கூட சம்மன் பெறவில்லை. பதிவுத் தபால் மூலம் சம்மன் அனுப்பபட்டபோதும், காவலர்கள் நேரில் சென்ற போதும் வீடு பூட்டப்பட்டுள்ளது என திரும்பி விட்டனர்.

எனவே இந்த வழக்கில் என் கணவரை ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

இந்த மனு நீதிபதி சக்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "விசாரணை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐந்துமுறை சம்மன் அனுப்பியும் கதவு பூட்டப்பட்டுள்ளது என சம்மன் திரும்பி வந்துள்ளது. வாட்ஸ்ஆப் மூலமாக சம்மன் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை, எனவே தல்லாகுளம் காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். லுக் அவுட் நோட்டீசை இந்தியா முழுவதும் தினசரி பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும்.

அதில், 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரண்டராக வேண்டுமென்று தெரிவிக்க வேண்டும். அதன் பின்பும் குற்றம் சாட்டப்பட்ட நபர் சரணடையாவிட்டால், நீதிபதி இந்த வழக்கை தன்னிச்சையாக நடத்தி உரிய தீர்ப்பு வழங்கலாம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பெற்றுள்ள முன் ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் காவல் ஆய்வாளர் மீது மதுரை மாநகர காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதிரடியாக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/tfKD8NW

Post a Comment

0 Comments