நிவாரண நிதி: `அம்மஞ்சல்லிகூட தரவில்லை' - அமைச்சரின் குற்றச்சாட்டு... விகடன் கருத்துக்கணிப்பு முடிவு!

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், 2024 - 2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, ``இரண்டு பேரிடர்கள் மாநில அரசின் நிதி நிலைமையை சிக்கலாக்கியுள்ளன. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு இன்னும் நிதி வழங்கவில்லை. தமிழ்நாட்டில் புயல், வெள்ளப் பாதிப்புக்கு மத்திய அரசு அம்மஞ்சல்லிகூட தரவில்லை.

விகடன் கருத்துக்கணிப்பு

தமிழ்நாட்டிற்கு மட்டும் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. குஜராத், அசாம், பீகார், மத்திய பிரதேசம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெள்ளப் பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கிய நிலையில் தமிழகத்திற்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுகிறது... மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மத்திய அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து நமது விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதில், ``குஜராத் உட்பட மற்ற மாநிலங்களுக்கு பேரிடர்நிவாரண நிதி வழங்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு அம்மஞ்சல்லிகூட வழங்காமல் பாரபட்சமாக செயல்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய கருத்து..." எனக் கேள்வி எழுப்பி, அதற்கு விருப்பத் தேர்வாக, "சரி" - "தவறு" - "கருத்து இல்லை" என்று கொடுத்திருந்தோம்.

விகடன் கருத்துக்கணிப்பு

இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட வாசகர்களில், குஜராத் உட்பட மற்ற மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு அம்மஞ்சல்லிகூட வழங்காமல் பாரபட்சமாக செயல்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய கருத்து... `சரி' என 74 சதவிகித வாசகர்களும், `தவறு' என 23 சதவிகித வாசகர்களும், `கருத்து இல்லை' என 3 சதவிகித வாசகர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, "இன்று நான் தமிழ்நாட்டுக்கு வந்ததும் எம்.ஜி.ஆர் எனக்கு நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான கல்வியையும், சுகாதாரத்தையும் எம்.ஜி.ஆர் கொடுத்திருக்கிறார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவர் என இன்றும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டில் துரதிஷ்டவசமாக எம்.ஜி.ஆரை அவமானப்படுத்துகின்ற ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு நல்லாட்சி கொடுத்தவர் ஜெயலலிதா மட்டுமே. காரணம் அவர் தனது வாழ்நாளை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்." எனப் பேசியிருந்தார்.

விகடன் கருத்துக்கணிப்பு

இது குறித்து நமது விகடன் வலைதளப் பக்கத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசியிருப்பது குறித்து கருத்துக்கணிப்பு நடந்து வருகிறது. அதில் வாசகர்கள் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்க www.vikatan.com என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்!



from India News https://ift.tt/DK5Z1LY

Post a Comment

0 Comments