``தமிழகத்தில் திராவிட கட்சிகள் வேரூன்றியுள்ளன; எளிதில் நீக்க முடியாது!" - கார்த்தி சிதம்பரம்

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெறுகின்ற ரயில்வே திட்டங்கள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில்  எம்.பி-க்களுடான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது.

கார்த்தி சிதம்பரம்

இதில் கலந்துகொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, ``முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு காரணம், அதிமுக வாக்காளர்கள் தங்கள் பக்கம் சாய்வார்கள் என்ற அல்ப ஆசைதான். கீழ்மட்ட அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் இருப்பார்கள்.

பிரதமர் மோடி நிறைய பேசுவார். திமுக காணாமல் போகும் என பேசியதெல்லாம் அதுபோலத்தான். தமிழகத்தில் திராவிட கட்சிகள் வேரூன்றி நிற்கிறது. அவ்வளவு எளிதில் மக்கள் மனதில் இருந்து அவர்களை நீக்க முடியாது.

கார்த்தி சிதம்பரம்

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் நிறைய சத்தம்தான் இருக்கு செயல்பாடு ஏதும் இல்லை.

  எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக அண்ணாமலை  கூறியதெல்லாம், பாஜக சொன்ன 15 லட்சம் கதை போலத்தான்.

தமிழகத்தில் அண்ணாமலையை பூதக்கண்ணாடி போட்டு காட்டுகிறீர்கள். பாஜகவின் உண்மையான நிலை வாக்கு எண்ணும் போதுதான் தெரியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களில் வெல்லும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/zj1HyDq

Post a Comment

0 Comments