Tamil News Live Today: ``சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியான திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” - ஆர்.என் ரவி

``பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியான திருவள்ளுவருக்கு மரியாதையை செலுத்துகிறேன்” - ஆர்.என் ரவி

திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, ``திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார், மேலும் அவர் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் விழா: கிரிக்கெட் வீரர் தோனிக்கு அழைப்பு! 



from India News https://ift.tt/aNGI3nc

Post a Comment

0 Comments