இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போர் 100 நாள்களைக் கடந்தும் முடிவுக்கு வராத நிலையில், தொடர்ந்து பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற துயரச் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. இதற்கிடையில், பாலஸ்தீனத்தின் மருத்துவம், கல்வி, சாலை போன்ற உள்கட்டமைப்புகளையும் இஸ்ரேல் குறிவைத்துத் தகர்த்துவருவதாகவும், அதன் மூலம், பாலஸ்தீன நாட்டை இல்லாமல் ஆக்குவதாகவும் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
இந்த நிலையில்தான், பாலஸ்தீனப் பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகர்க்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இது சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,``பாலஸ்தீனப் பல்கலைக்கழகம் தாக்கப்பட்டது குறித்து என்னிடம் போதுமான தகவல்கள் இல்லை. எனவே, இது குறித்து இஸ்ரேலிடம் விவரம் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால், மக்களின் உள்கட்டமைப்பை ஹமாஸ் குழு பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தெற்கு காஸாவின் முக்கிய நகரமான கான் யூனிஸ் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ISRAEL just blew up the University of Palestine in GAZA — even though it has LITERALLY NOTHING to do with Hamas. pic.twitter.com/GermWmBT1l
— Jackson Hinkle (@jacksonhinklle) January 18, 2024
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம்,``தாக்கப்பட்ட பகுதி ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் கோட்டை" எனத் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல் குறித்துப் பேசிய காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள்,``இந்தப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,620. தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர்" எனக் குறிப்பிடுகிறார்கள். அதே நேரம், 9,000 ஹமாஸ் போராளிகளைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீன மக்களின் அதிகளவிலான உயிரிழப்பு குறித்து மீண்டும் அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்திருப்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/T89lgwu
0 Comments