முறைகேடாக வாகன நுழைவு வசூல்..! - ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடி வாரன்ட்

புனித தலமான ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பல்வேறு ஊர்களிடம் இருந்து வாகனங்கள் மூலம் வரும் இவர்கள் வழியெங்கும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகடிகளில் கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையில், ராமேஸ்வரம் நகருக்குள் நுழையும் போதும் நகராட்சி நிர்வாகத்தினால் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ராமேஸ்வரம் நகராட்சி

வாகன நிறுத்த கட்டணம் என்ற பெயரில் இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட எந்த வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுப்பதில்லை. இதனால் தேவஸ்தானம் மற்றும் தனியார் நடத்தும் வாகன நிறுத்தும் இடங்களிலும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தி நிறுத்தும் நிலை உள்ளது.

இந்நிலையில் பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர் என்பவர் கடந்த ஆண்டு கார் மூலம் ராமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது வாகன நுழைவு கட்டணமாக ரூ. 100 நகராட்சி நிர்வாகத்தினால் வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர் பிரபாகர் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி, ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் வசூலிக்கும் வாகன நுழைவு கட்டணம் முறையற்றது என அறிவித்ததுடன், வழக்கு தொடர்ந்த பிரபாகரனுக்கு நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகையும் சேர்த்து ரூ.23 ஆயிரம் வழங்குமாறு கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம்

ஆனால் நகராட்சி நிர்வாகம் இந்த தொகையினை பிரபாகரனுக்கு வழங்கவில்லை. இதையடுத்து பிரபாகரன் நுகர் நீதிமன்றத்தில் செயலாற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், ஆணைய உத்தரவை நிறைவேற்றாத ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடி வாரன்ட் பிறபித்து உத்தரவிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/qbWKnho

Post a Comment

0 Comments