2022 அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பண்டிகையின் போது குஜராத் மாநிலம், கேதா மாவட்டத்தின் உந்தேலா கிராமத்தில் நடந்த கர்பா நடன நிகழ்வில் கலகத்தை ஏற்படுத்தியாதாக சிலர் கைது செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் அவர்கள் கற்கள் வீசியதாகவும் அதில் சில கிராமவாசிகள், காவல்துறையினர் காயமடைந்தனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 இஸ்லாமியர்களை உள்ளூர் போலீஸார் கம்பத்தில் கட்டி வைத்து தடியால் சரமாரியாக தாக்கி, அதனை வீடியோவாக எடுத்திருந்தனர். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும், `உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை அவமதித்ததாக’ உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
சந்தேக நபர்களை காவலில் வைத்து விசாரிப்பது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததற்காக நான்கு போலீஸாரை 14 நாள்கள் காவலில் வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ஏ.வி.பர்மர், சப்-இன்ஸ்பெக்டர் டி.பி.குமாவத், தலைமை கான்ஸ்டபிள் கே.எல்.தாபி மற்றும் கான்ஸ்டபிள் ஆர்.ஆர்.தாபி ஆகிய நான்கு போலீஸார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய குழு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விசாரணை செய்தது.
இந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் போலீஸார் நடவடிக்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிந்திவித்திருந்தது. மக்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க போலீஸாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீதிபதிகள் கவாய் மற்றும் மேத்தா , மக்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க சட்டப்படி உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்றும் இதுபோன்ற செயல்களைச் செய்ய காவல்துறையினருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறதா என்றும் கண்டித்தர்.
“காவல் துறைக்கு ஒரு கிரிமினலைக் கைது செய்ய அதிகாரம் இருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தி குற்றப் பின்னணியைப் பெறலாம். ஆனால் அதேவேளையில் அந்த நடவடிக்கையின்போது அடித்துத் துன்புறுத்தி மூன்றாம் நிலை தண்டனைகளை வழங்கக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் 1996-ல் வழங்கிய ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், “சட்டத்தை அறிந்து கொள்ளாமல் காவலர்கள் செய்த குற்றத்தை வைத்து அறியாமையில் செய்துவிட்டார்கள் என்று வாதிட முடியாது. ஒவ்வொரு காவலரும், காவல் அதிகாரியும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் என்னவென்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்றனர்.
அப்போது காவலர்கள் தரப்பு வழக்கறிஞர், “ஏற்கெனவே அந்த 4 காவலர்களும் கிரிமினல் வழக்கு விசாரணை, துறை ரீதியான விசாரணை மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை வளையங்களில் இருக்கின்றனர் அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்” என்று வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/nedSsqw
0 Comments