சர்ச்சைக்குரிய இடத்தில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் ரூ.1,800 கோடி செலவில் கட்டுப்பட்டு வந்த ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டது. அயோத்தியில் கட்டப்பட்டுக்கொண்டே இருக்கும் இந்த ராமர் கோயிலில், பிரதமர் மோடி முன்னிலையில் பால ராமர் சிலைக்குப் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விழாவில், பிரபல தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், மத பெரியவர்கள் எனப் பொதுமக்களைத் தவிர ஆயிரக்கணக்கில் நபர்கள் பங்கேற்றனர். இன்று முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிராண பிரதிஷ்டை முடிந்த பிறகு கோயிலில் உரையாற்றிய மோடி, ``பல நூற்றாண்டுகளின் காத்திருப்புக்குப் பிறகு, நம் ராமர் மீண்டும் அயோத்திக்கு வந்துவிட்டார். பல நூற்றாண்டுகளாக இந்தக் கோயில் பணியைச் செய்ய முடியாமல் போயிருக்கிறது. அதனால் இன்று ராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ராமர் கோயில் அமைப்பதற்கான சட்டப் போராட்டம் பல ஆண்டுகளாக நீடித்தது. அதற்குச் சரியான நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோயில் வெறும் கடவுளின் கோயில் மட்டுமல்ல. இந்தியாவின் அடையாளம் இந்தக் கோயில்" என்று கூறினார்.
இந்த நிலையில், அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு தான் எடுத்த முதல் முடிவு என்னவென்று மோடி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து, மோடி நேற்று தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில், ``உலகிலுள்ள அனைத்து பக்தர்களும் எப்போதும் ஸ்ரீ ராமரின் ஒளியிலிருந்து ஆற்றல் பெறுகிறார்கள்.
அயோத்தியில் இன்று (ஜனவரி 22) கும்பாபிஷேகத்தின் புனிதமான தருணத்தில், இந்திய மக்கள் தங்கள் வீடுகளின் மேல் சொந்தமாக சோலார் பேனல் அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்ற என்னுடைய தீர்மானம் மேலும் வலுப்பெற்றுள்ளது. அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு, ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார அமைப்பை நிறுவும் இலக்குடன் நமது அரசாங்கம் `பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா” திட்டத்தை தொடங்கும் என்பதுதான். இதன்மூலம், ஏழை, நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறைவது மட்டுமின்றி, எரிசக்தி துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையும்" என்று பதிவிட்டிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/I5MYKES
0 Comments