`23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில மகளிர் கொள்கை...' - தமிழக அமைச்சரவைக் கூட்டத்தின் ஹைலைட்ஸ்

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக இதில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைவரும் கலந்துகொண்டனர். வனத்துறை அமைச்சர் மதிவாணன் மட்டும் பங்கேற்கவில்லை. உடல்நலக் குறைவால் அவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டபடி காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் தொழில்துறை, சமூகநலத்துறை மற்றும் கலால்துறை சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்

இது குறித்து நம்மிடம் பேசிய கோட்டை விவரப்புள்ளிகள் சிலர், "ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். ஆனால் இந்த முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடியின் தமிழகம் வருகை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் போன்றவற்றால் தாமதமானது. இந்தச் சூழலில்தான் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அடுத்த மாதம் நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், தொழில்துறை, சமூகநலத்துறை மற்றும் கலால்துறைகளின் சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக கடந்த ஆண்டு ஆளுநர், தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையை மாற்றி வாசித்த சம்பவம் நடந்தது. எனவே இந்த முறை ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில்... விரைவில், மக்களவைத் தேர்தலும் அறிவிக்கப்பட உள்ளது. எனவே தமிழக அரசும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டில் உள்ளது. அதற்கான தயாரிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையிலான குழு தயாரித்த மாநில மகளிர் கொள்கைக்குத் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், 'அரசு, தனியார் துறையில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம், 100 நாள்கள் வேலைத் திட்டத்தைக் கூடுதலாக 50 நாள்கள் நீட்டிப்பு செய்வது, பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்புக் கலைகள் பயிற்சி வழங்குதல், 19 வயது வரையிலான இளம்பெண்களுக்கு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டம் விரிவுபடுத்துதல், சுகாதாரத்தை மேம்படுத்துதல், பாலின பாகுபாடுகளை கலைதல், அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ள தலைமை பொறுப்புகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்குதல்' உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

2001-ல் தேசிய மகளிர் கொள்கை அறிவிக்கப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில மகளிர் கொள்கை தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வரும் 27-ம் தேதி ஸ்பெயின் செல்கிறார். பிப்.12-ம் தேதி தமிழகம் திரும்புகிறார். முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை செயலாளர் உள்ளிட்டோர் செல்கின்றனர். இந்தப் பயணத்துக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/FgyfiM7

Post a Comment

0 Comments