Tamil News Today Live: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை... நெல்லை விரைந்த பேரிடர் மீட்புக் குழு!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை!

தென் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள சாலைகள் கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நெல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தாமிரபரணியில் நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழு நெல்லை மாவட்டத்திற்கு விரைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்படினத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 93 செ.மீ மழை பதிவாகி உள்ளது.



from India News https://ift.tt/Bu53qkP

Post a Comment

0 Comments