திருச்சி விமான நிலைய புதிய முனையதிறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகள்... பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்!
திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார்.
டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பின்னர், 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பார்வையிட்டு திறந்து வைக்கிறார்.
மேலும் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் திருச்சி என்ஐடியில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதி, சேலம் – மேக்னசைட் சந்திப்பு – மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி - மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் - தென்காசி, செங்கோட்டை- தென்காசி, திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதைகள் மின் மயமாக்கம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மொத்தம் ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதோடு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்கிறார் பிரதமர் மோடி. பின்னர் மதியம் 1 மணி அளவில் தனி விமானத்தில், லட்சத்தீவுகள் செல்கிறார்.
from India News https://ift.tt/xwBrEId
0 Comments