காலிஸ்தான் எனும் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து `சீக்கியர்களுக்கான நீதி’ எனும் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருப்பதால், அமெரிக்கா, கனடாவில் இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்படுகிறது. சீக்கியர் கொலையைத் தொடர்ந்து, அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும், அமெரிக்கா - கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவருமான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரைக் கொலைசெய்யச் சதித்திட்டம் நடைபெற்றதாக, அமெரிக்கா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.
அந்தச் சதித்திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கும் இந்திய அரசு ஊழியர் நிகில் குப்தா (52) என்பவரை அமெரிக்கக் காவல்துறை கைதுசெய்து, சிறையில் வைத்திருக்கிறது. இந்த நிலையில், நிகில் குப்தாவின் குடும்பத்தினர், தனிமைச் சிறையில் இருக்கும் நிகில் குப்தா மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டி செக் குடியரசு Czechia நாட்டின் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். அந்த மனுவில், ``கொலை சதித்திட்டம் குற்றச்சாட்டில் தனிமை சிறையில் இருக்கும் நிகில் குப்தா சைவ உணவு உண்பவர் என்று அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், அவருக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதையே உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பலமுறை அவர் சைவம் எனத் தெரிவித்தும், கடந்த 11 நாள்களாக அவருக்கு உணவு வழங்க மறுத்துவிட்டனர். மேலும், அந்த சிறையில், காவல்துறை அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், உண்ண உணவும் தண்ணீரும் கொடுக்கப்படவில்லை.
மேலும் இந்தியத் தூதரக அணுகல், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொள்வதற்கான உரிமை, சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான சுதந்திரம் ஆகியவையும் மறுக்கப்படுகின்றன. அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்த பிறகே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள். இது எங்களுக்கு வேதனை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நிகில் குப்தாவுக்குரிய உணவை வழங்க அனுமதித்தார். மேலும், ``குப்தாவின் குடும்பத்தினர் தூதரக அணுகல் மற்றும் வழக்கின் நிலையை அறிய ஐரோப்பிய நாட்டில் உள்ள இந்தியத் தூதருக்கு உத்தரவிட முடியாது. என்றாலும், இந்த வழக்கின் நிலையை அறிய இந்த நீதிமன்றத்தை அணுகவும்" எனத் தீர்ப்பளித்திருக்கிறார்.
from India News https://ift.tt/8Jkm53D
0 Comments