Tamil News Today Live: ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்... இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்... இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி தமிழக அரசும், ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஐந்து மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன், ஆதார் அட்டை விவரங்களுடனும் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்மன்களை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இன்று இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பளிக்கிறது.



from India News https://ift.tt/Yy2HSd8

Post a Comment

0 Comments