`மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது’ - முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின், சமூக வலைதளங்களில் `இந்தியாவுக்காகப் பேசுகிறோம்' என்ற தலைப்பில் `பாட்காஸ்ட் (Podcast)' வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட பாட்காஸ்ட்டில் முதல்வர் ஸ்டாலின், ``இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது

முதலமைச்சராக மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.” எனப் பேசி உள்ளார். மேலும், `மாநில சுயாட்சி வெல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். இந்தியாவை இந்தியா கூட்டணியிடம் ஒப்படையுங்கள்’ எனவும் பேசியுள்ளார்.
#Speaking4India Episode – 3
— M.K.Stalin (@mkstalin) October 31, 2023
➡️ மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவை குறித்து தமிழ்நாட்டின் குரல்!
➡️ எபிசோட் 2-இன் ரீச்சும், ஒன்றிய அரசின் ரியாக்ஷனும்!
➡️ மாநில முதலமைச்சராக ஆதரவு பேச்சும் – பிரதமரானவுடன் எதிர்ப்பும்!
➡️ மாநில நிர்வாகத்தை முடக்கிட, ஆளுநர் மாளிகை?
➡️ மினி… pic.twitter.com/iuSm9slnIz
from India News https://ift.tt/aiKXpmE
0 Comments