`காஸாவுக்கு எதிரான 2-ம் கட்ட போர் தொடங்கியிருக்கிறது!' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல்மீது கடந்த 7-ம் தேதி காஸாவின் ஹமாஸ் அமைப்பு, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது. அதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காஸா-மீது கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டது. ஹமாஸும் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. மோதல் தீவிரமடைந்து, போராக மாறியதை அடுத்து, இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதிலும், காஸாவில் உயிர் பலி மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் காஸா சிதைந்து போயிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் ஐ.நா-வின் முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர், 23-வது நாளை எட்டியிருக்கிறது.
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000-ஐ கடந்து விட்டதாகவும், உயிரிழந்தோரில் பாதி பேர் குழந்தைகள் என்றும் காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
ஐ.நா அமைப்பு மற்றும் பல்வேறு உலக நாடுகளின் போர் நிறுத்த அழைப்பை தொடர்ந்து நிராகரித்து வரும் இஸ்ரேல், `ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை வேரறுக்கும் வரை ஓயப் போவதில்லை' என்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இரண்டாம் கட்ட போர் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கிறது. நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு, உலக அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.
from India News https://ift.tt/xOfEoZz
0 Comments