IND Vs PAK: பெவிலியன் திரும்பிய ரிஸ்வான்; `ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்ட ரசிகர்கள் - உதயநிதி கண்டனம்!

இந்தியாவில் `உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்' நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் `இந்தியா - பாகிஸ்தான்' அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 191 ரன்கள் எடுத்தது. அதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மென்களின் அபார ஆட்டத்தால், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, அந்த அணியின் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து, பெவிலியன் நோக்கி திரும்பினார். அப்போது ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களில் சிலர் அவரை நோக்கி, `ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. அதேபோல, போட்டியில் தோல்வியடைந்தது குறித்துப் பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், ``இன்றைய போட்டி ஐசிசி நடத்திய போட்டிபோல இல்லை... ஏதோ பிசிசிஐ நடத்தும் இருதரப்பு தொடர் போலத்தான் இருந்தது. ஒருமுறைகூட, `தில்... தில்... பாகிஸ்தான்' பாடல் ஒலிக்கவில்லை. அது உளவியல்ரீதியாக எங்களைப் பாதித்தது. ஆனால், தோல்விக்கு இதனை ஒரு காரணமாகச் சொல்ல விரும்பவில்லை" எனக் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. பலரும், இந்திய ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியா தன்னுடைய விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோமல் ஆகியவற்றுக்குப் பெயர்போனது.

இருப்பினும், அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்தப்பட்ட விதம், ஏற்றுக்கொள்ள முடியாதது. விளையாட்டு என்பது நாடுகளுக்கிடையே `ஒருங்கிணைக்கும்' சக்தியாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தை வளர்க்க அது பயன்பட வேண்டுமே தவிர, வெறுப்பைப் பரப்பும் கருவியாக அதைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/aPkX9HY

Post a Comment

0 Comments