நாடாளுமன்றத்தில் ஆளும் அரசுக்கு எதிராகப் பல கேள்விகளை முன்வைப்பர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் இவர் கேட்கும் கேள்விகளால் இந்தியா முழுவதும் அவ்வப்போது வைரலாகுவார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய முகமாக இருப்பவர். இவர் மீது பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே லஞ்சம் பெற்றுக்கொண்டே மஹுவா மொய்த்ரா கேள்விகளை எழுப்பினார் எனப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை விசாரிக்கக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்திருக்கிறார். இது குறித்து அவர் மக்களவைத் தலைவருக்கு எழுதியக் கடிதத்தில், "அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடியைக் குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கத் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம், மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியிருக்கிறார்.
ஹிரானந்தானி குழுமம் அதானி குழுமத்துடனான உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை இழந்துவிட்டது, மேலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறி, சபையை அவமதித்து, குற்றவியல் சதி செய்திருக்கிறார். 2019 - 2023க்கு இடையில், எம். பி மஹுவா மொய்த்ரா கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனியின் உத்தரவின் பேரிலிருந்து கேட்கப்பட்டவை.
இந்த கேள்விகளைக் கேட்டதற்காக திரிணாமுல் எம்.பி.க்கு ஹிரானந்தனி குழுமம் ரூ 2 கோடியும், விலை உயர்ந்த ஐ-போன் போன்ற பரிசுகளையும் கொடுத்திருக்கிறது. மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ75 கொடுத்திருக்கிறார்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஹிரானந்தானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், ``எங்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் எப்போதும் வியாபாரத்தில்தான் ஈடுபட்டிருக்கிறோம், அரசியலில் இல்லை. எங்கள் குழு எப்போதும் தேசத்தின் நலனுக்காக அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. அதைத் தொடரும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் X -ல், "போலி பட்டம் தொடங்கிப் பல உரிமை மீறல் நோட்டீஸ்கள் பாஜக தலைவர்கள் மீது நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது சபாநாயகர் முடிவெடுத்தவுடன் என் மீது சபாநாயகர் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதானி நிலக்கரி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை உள்ளிட்டோரும் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/QDSu0a4
0 Comments