இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதனிடையே, ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேல் வாசிகள் கொல்லப்பட்டதாகவும், 199 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது.
இதன்காரணமாக, `ஹமாஸை இந்த பூமியிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறிவோம்' என்று இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 2,750-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், `போரை ஆரம்பித்தது ஹமாஸ் தான், போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை' என்று கூறும் இஸ்ரேல், `ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார் உட்பட அவரின் குழுவினர் எங்கள் பார்வையில் இருக்கின்றனர். விரைவில் நெருங்குவோம்' என காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்திவருகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் இராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேதே, ``எங்கள் மக்களுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் அச்சுறுத்தல் எங்களைப் பயமுறுத்தவில்லை. அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்று நேற்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, ஹமாஸின் வான்வழி தாக்குதல் நடவடிக்கையின் தலைவர் மெராட் அபு மெராட்டை (Merad Abu Merad) இஸ்ரேலின் விமானப்படை கொன்றுவிட்டதாக, கடத்த சனிக்கிழமை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் போர் தீவிரமடைவது உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/mxzQ2fs
0 Comments