தொடர்ந்து 7-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்... கைதுசெய்த காவல்துறையினர்!

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம், தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நலச் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை (DPI) வளாகத்தில், கடந்த ஏழு நாள்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்தனர்.

ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

குறிப்பாக, இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம், பகுதிநேர ஆசிரியர்களை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இடையில், மூன்று தரப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஸ், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஆனால், `ஏற்கெனவே இதுபோன்று பலமுறை பேச்சுவார்த்தையும் நடத்தியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வர் தனது முடிவை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்' எனக் கூறி போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிடாமல் தொடர்ந்தனர். இந்த நிலையில், நேற்றோடு ஏழு நாள்களாகப் போராட்டம் நடத்த ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கிவந்த காவல்துறையினர், இனியும் போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை நேற்று கைதுசெய்தனர்.

ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஏற்கெனவே, இந்த ஆண்டு தொடக்கத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின்படி கோரிக்கைகள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவுசெய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியபிறகு, ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறியே ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/0qsmeuS

Post a Comment

0 Comments