கனடா குடியுரிமை பெற்ற, சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்ற கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தியா - கனடா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா, கனடாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவருகிறது. இரு நாட்டின் தூதர்களும் வெளியேற்றப்பட்டார்கள். கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு, மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் மோடியிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியது, இரு நாடுகளும் பரஸ்பரம் விசா வழங்குவதை நிறுத்தியது எனப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.
கனடாவின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேய்ர் (Bill Blair), வெஸ்ட் பிளாக் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``இந்தியாவுடனான கனடாவின் உறவு முக்கியமானது. கனடா, இந்தியாவுடனான கூட்டாண்மையைத் தொடரும். அதேநேரம் இந்தியாமீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையும் தொடரும். கனடாவின் இந்த நடவடிக்கையால், இந்தியாவுடனான கனடாவின் உறவு சவாலான பிரச்னையாகவே இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், சட்டத்தைப் பாதுகாப்பதற்கும், எங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதும், ஒரு முழுமையான விசாரணையை நடத்தி, உண்மையைக் கண்டறிவதற்கான பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றதாகக் கனடா தெரிவித்திருக்கிறது. இது குறித்து கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி,"இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேற நாங்கள் வசதி செய்திருக்கிறோம். அவர்களது குடும்பத்தினரும் இப்போது வெளியேறிவிட்டனர்.
41 தூதர்களை ஒரே நேரத்தில் வெளியேற்றுவது இதுவே முதல்முறை. இந்த நடவடிக்கை இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கும் திட்டமில்லை. இரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் நிலைமையை மோசமாகாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டது. கனடா சர்வதேச சட்டத்தைத் தொடர்ந்து பாதுகாக்கும். இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/uLgYZdO
0 Comments