ஏலகிரி ஏரியின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய ஜூ.வி - கழிவுகளை அகற்றிய திருப்பத்தூர் அதிகாரிகள்!

திருப்பத்தூரை அடுத்த ஜோலார்பேட்டைக்கு அருகில் இருக்கிறது ஏலகிரி கிராமம். இந்த ஏலகிரி கிராமத்தையொட்டி அமைந்திருக்கிறது ஏலகிரி ஏரி. ஏலகிரி ஏரி நாளுக்கு நாள் மாசடைந்துகொண்டேவந்தது. இந்த ஏரியின் கரையோர நிலங்கள் முழுமையாக மாசடைந்து காணப்பட்டன. சில காலமாகவே இந்த ஏரியின் கரை ஓரங்களில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிவந்தன. அது மட்டுமல்லாமல் கரையோரங்களில் மருத்துவக்கழிவுகளும் கொட்டப்பட்டுவந்தன.

ஏலகிரி ஏரி

ஜோலார்பேட்டை சந்திப்பில் ரயில்வே நிலையம், ஹோட்டல் தெரு மற்றும் இடையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வரும் கழிவுநீர், ஏலகிரி ஏரியில் இணைக்கும் கால்வாயில் கலந்து, கூடவே மது பாட்டில்களும், நெகிழிப்பைகளும் கலந்து மிகவும் மாசடைந்து, துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. கால்வாயிலுள்ள கழிவுநீர் அங்கேயே தேங்கி, நோய்கள் உருவாகும் மற்றும் கொசு முட்டைகள் உருவாகும் அபாயம் இருந்தது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்களிடம் பேசியும், நேரடியாக விசிட் செய்தும் மோசமான நிலை குறித்து விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் நாம் பேசினோம். அதன் காரணமாக, தற்போது பல்வேறு இடங்களிலிருந்து வரும் கழிவுநீரை ஏலகிரி ஏரியில் இணைக்கும் இந்தக் கால்வாயிலுள்ள குப்பைகளும், நெகிழிப் பொருள்களும் 25 செப்டம்பர் அன்று இயந்திரத்தின் உதவியால் அகற்றப்பட்டன. இதே போன்று இந்தக் கால்வாயில் குப்பைகள் வராமல் இருப்பதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் எதிர்ப்பார்ப்பதும், நிரந்தரத் தீர்வுதான்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/3jzq7HJ

Post a Comment

0 Comments