`இன்பநிதி பாசறை' - `எதிர்கால சந்ததிக்காக ஆரம்பித்தோம்!' - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட்

புதுக்கோட்டையில் தி.மு.க நிர்வாகிகள் சிலர் `எதிர்காலமே...' என்ற தலைப்பில், `இன்பநிதி பாசறை' என்ற பெயரில், செப்டம்பர் 24-ம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என போஸ்டர்கள் அடித்து நகரம் முழுவதும் ஆங்காங்கே ஒட்டினர்.

அந்த போஸ்டர்களில், ``மண்ணைப் பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை. போராட்டக்களமின்றி வெற்றி கிடைப்பதில்லை" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர்கள் தி.மு.க தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இன்பநிதி போஸ்டர்

இந்த நிலையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். அதன்படி தி.மு.க நிர்வாகிகள் இருவரும், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒழுங்கு நடவடிக்கை

இது குறித்து தற்காலிகமாக தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருக்கும் திருமுருகனிடம் பேசினம். "தி.மு.க-வில் வடக்கு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக உழைக்கிறேன். ஆனால், தற்போது வடக்கு மாவட்டத்தில் அணிகளின் பொறுப்பாளர்கள் விஷயத்தில் நேற்று கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அமைப்பாளர் பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது. திட்டமிட்டு எங்களைப் புறக்கணித்துள்ளனர். சமீபத்தில் புதுக்கோட்டைக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தபோது, அவரை பக்கத்தில் நெருங்ககூட விடவில்லை.

போஸ்டர்கள்

தலைவர் கருணாநிதியின் பேரன் அரசியலுக்கு வரும்போது, தலைவர் ஸ்டாலினின் பேரன் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது. நாளை அவரும் அரசியலுக்கு வர அதிக வாய்ப்புள்ளது. எங்களது எதிர்கால சந்ததிக்காக அவர்களும் எங்களைப் போன்று பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, இன்பநிதி எங்கள் கோரிக்கையை ஏற்பார் என்பதற்காக `இன்பநிதி பாசறை' ஆரம்பித்திருக்கிறோம். நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகத் தானே நாங்கள் அறிவித்து நோட்டீஸ் ஒட்டினோம். இதில், என்ன தவறு நடந்திருக்கிறது. நேற்று நோட்டீஸ் ஒட்டினோம். இன்று நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இது போன்ற நடவடிக்கையை அனைத்து விஷயங்களுக்கும் எடுக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/0LU3gvs

Post a Comment

0 Comments