இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 75 ஆண்டுகளாக பழைய நாடாளுமன்றத்தில் இயங்கிவந்த இந்திய அரசு, நேற்று புதிய நாடாளுமன்றத்துக்கு நகர்ந்தது. நாட்டின் முதல் பிரதமர் நேரு முதல் மன்மோகன் சிங் வரை பழைய நாடாளுமன்றத்தில் அரங்கேறிய பல்வேறு நிகழ்வுகளை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துவந்தார். அதோடு, பழைய நாடாளுமன்றத்துக்கு `அரசியல் சாசன சபை' என்ற பெயரையும் மோடி நேற்று சூட்டினார்.
இந்த நிலையில் நேற்று புதிய நாடாளுமன்றத்தில் நடந்த முதல் கூட்டத்தின்போது தங்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தின் முன்னுரையில் `மதசார்பற்ற', `சோசியலிச' போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது குறித்து நேற்று தனியார் ஊடகத்திடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ``எங்களுக்கு வழங்கப்பட்ட புதிய அரசியலமைப்பு நகல்களை, நாங்கள் எங்கள் கைகளில் பிடித்து புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தோம். ஆனால், எங்களுக்குப்பட்ட அரசியலமைப்பு நகலின் முன்னுரையில் `மதசார்பற்ற', `சோசியலிச' என்ற வார்த்தைகள் இல்லை. 1976-ம் ஆண்டு திருத்தத்துக்குப் பின்னர் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன என்பதை நாங்கள் அறிவோம்.
தற்போது இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயம். அவர்களின் (பா.ஜ.க) இந்த நோக்கம் சதேகத்துக்குரியது. இதை அவர்கள் புத்திசாலித்தனமாகச் செய்திருக்கின்றனர். இது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் நான் எழுப்ப முயன்றேன். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று கூறினார்.
முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உரையாற்றுகையில், ``இந்திய அரசியல் சாசனம், பகவத் கீதை, பைபிள், குரான் ஆகியவற்றை விட குறைவானதல்ல" என்று கூறியிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/ZN4s2ot
0 Comments