2023 மே 19 -ம் தேதி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கியது. மேலும் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்யவும், மாற்றிக்கொள்ளவும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நான்கு மாதங்கள் அவகாசம் அளித்திருந்தது. அதன்படி, ரூ.2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கான கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்தது. பலரும் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு அக்டோபர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.
அக்டோபர் 8-ம் தேதி முதல் வங்கிகள் ரூ.2000 நோட்டுகளைப் பெறாது. அதன்பிறகு தேவைப்படுவோர், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும். நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே 19-ம் தேதிவரையில், நாட்டில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இவற்றில் ரூ.3.42 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. மீதம் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகளே புழக்கத்தில் உள்ளன என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
from India News https://ift.tt/yMwgLZC
0 Comments