அரசு குடியிருப்புப் பள்ளியில் சோதனை; 100-ல் 89 மாணவிகள் மாயம் - வார்டன் உட்பட 4 பேர்மீது எப்ஐஆர்!

உத்தரப்பிரதேசம் மாநிலம், கோண்டாவில் அரசு சார்பில் குடியிருப்புப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. அந்தக் குடியிருப்புப் பள்ளியில் மொத்தம் 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த நிலையில், அந்தக் குடியிருப்புப் பள்ளிக்கு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதற்காக நேற்று இரவு சென்றிருக்கின்றனர். அப்போது மொத்தமுள்ள 100 மாணவிகளில் 11 பேர் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, வார்டன் உட்பட நான்கு பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

தங்குமிடம்

இந்த நிலையில், இது குறித்து கோண்டா மாவட்ட நீதிபதி நேஹா சர்மா, `` பரஸ்பூரிலுள்ள கஸ்தூரிபா காந்தி குடியிருப்பு பெண்கள் பள்ளியில் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் சோதனை நடத்தப்பட்டது. இங்கு மொத்தம் 100 மாணவிகள் இருப்பதாக பதிவுசெய்திருக்கும் நிலையில், 11 மாணவிகள் மட்டுமே இருந்தனர். 89 மாணவிகள் இல்லாதது குறித்து கேட்டபோது விடுதியின் வார்டன் சரிதா சிங்கால் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை'' என்றார்.

மேலும் இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பிரே. சந்த் யாதவ், ``மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், இது தொடர்பாக பள்ளி வார்டன், முழு நேர ஆசிரியர் உட்பட நான்கு பேர்மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஊழியர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பணியில் இருந்தவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட இளைஞர் நல அலுவலருக்குத் தனியாகக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், காணாமல் போன 89 சிறுமிகள் குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/FEQqTRS

Post a Comment

0 Comments