அணணமல கயலடதத சஙகல | நலகர வநத பரடர மடப படயனர - News in Photos

மாவட்ட வன பாதுகாப்பு சட்டத்தின் படி வீடுகளில் கிளி வளர்க்க கூடாது என்ற உத்தரவுக்கு ஏற்ப சுமார் 10 வளர்ப்புக் கிளிகளை பொதுமக்கள் இராமநாதபுரம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பூரண மதுவிலக்கு மற்றும் போதை பொருளை தடை செய்யக்கோரி கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் நாள்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் ஊட்டி வந்தடைந்தனர்.
சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் சிலம்பம், சுருள் வாள் பிரிவில் தங்க பதக்கம் வென்ற மாணவி சுபஸ்ரீ; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் அழைத்து வாழ்த்து
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவ திருவிழா ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடந்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் தீண்டாமை சுவரை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் தர்ணாவில் அப்பகுதி மக்கள்!
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்குவகுப்புகள் தொடங்கப்பட்டன. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதார துறை மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தும் பேராசிரியர்.
புதுச்சேரி நகரப்பகுதிகளில் பரவலாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
புதுச்சேரி அரசு சுகாதாரத் துறைக்கும், சத்யா சிறப்புப் பள்ளிக்கும் இடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். அருகில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி
ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரித்துறையின் சார்பில் 6-வது ஜி.எஸ்.டி. தின விழாவில் கலந்துகொண்ட கவர்னர் தமிழிசை சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
கவர்னரை சந்தித்த அமைச்சர் சந்திர பிரியங்கா தனது துறைகள் சார்ந்த திட்டப் பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசின் திட்ட பயனாளிகள் கூட்டத்தில் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
விருதுநகர்: சாத்தூரில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெங்கடாசலபதி கோயில் ஆனி பிரமோற்சவத் தேரோட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி - பொட்டல்காடு வழித்தடத்தில ஏற்கனவே இயக்கப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்" என பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி: அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவில் கொடை விழாவில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை போலீஸார் விசாரணை செய்தனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிடயிமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிந்தார் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பள்ளா பாளையம் பகுதி மக்கள் சாலை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிடயிமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிந்தார் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா.
ஈரோடு தென்றல் நகரில் மின் ஒயரில் மோதி இறந்த மயில்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
பாம்பன் சாலைப் பாலத்தின் பராமரிப்பு பணிகளுக்காக வேலைகள் நடைபெறுகிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு.
குழந்தையின் கை அழுகிய விவகாரம்: குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்க வில்லை: குழந்தை தாய் பேட்டி இடம்: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில், வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திருநெல்வேலி; கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கல்கத்தின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
திருநெல்வேலி; பேச்சாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு பதினென்று மற்றும் பன்னிரெண்டு படிக்கும் மாணவ மாண்விகளுக்கு சன்றிதழை ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் கொட்டிய தண்ணீர்.
திருநெல்வேலி; ஆனிப்பெருந்தேர்த் திருவிழா பத்தாம் திருவிழவையொட்டி அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் சப்தாவர்ண பல்லக்கில் திருவீதிவுலா நடைபெற்றது.
மதுரை செல்லப்பட்டி கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவரின் ஆணவப்போக்கை கண்டித்து தங்களது மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாம செய்ய கடிதம் கொண்டு வந்த மன்ற உறுப்பினர்கள்.


from India News https://ift.tt/JCtB3Xm

Post a Comment

0 Comments